வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசு வழங்கிய பயிற்சிக்கான நியமனகத்தை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ள உத்தரவு தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 45585 பட்டதாரிகள் மார்ச் 1 திகதி முதல் இணைத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது.
தேர்தல்கள் ஆணைக்குழு இந்நியமனங்களை இடைநிறுத்தினாலும் கூட பயிலுனர்களுக்கு மார்ச் 1 முதல் கொடுப்பனவு வழங்குவதற்கு ஏற்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நியமனங்கள் தேர்தல்கள் அறிவிக்கப்பட முன்னர் வழங்கப்பட்டவை எனவும் அவர் தெரிவித்தார். இவர்கள் அடுத்த வருடம் மார்ச் 1 முதல் நிரந்தர நியமனம் பெறும் வரை பயிலுனர்களுக்கான கொடுப்பனவைப் பெறுவர். என்றும் அவர் குறிப்பிட்டார்..
(