நுண்கலைப் பலக்லைக்கழக அனுமதிக்கான பிரயோகப் பரீட்சைக்காக அறவிடும் கட்டணத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரி நுண்கலை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டனர்.
முதலாம் ஆண்டுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்காக நடத்தப்படும் பிரயோகப் பரீட்சைக்கு ரூபா 2500 ஒவ்வொரு மாணவர்களிடமிருந்தும் அறவிடப்படுவதாகவும் இது சட்டவிரோதமானது என்றும் மாணவர் ஒன்றியத் தலைவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி அமைச்சிக்கு பாதயாத்திரையாக சென்றதாகவும் அவர்கள் கலந்துரையாடுவதற்கான நேரம் ஒதுக்கித் தரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அதன் காரணமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
(Photo Credit : ADA.lk)