அரச ஊழியர்களுக்கு நெகிழ்வுத் தன்மையுடனான நேர ஒழுங்கை அறிமுகப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்துவதாக அமைச்சரவை இணை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
வாரத்திற்கு 40 மணித்தியாலங்கள் பணி புரியவேண்டும். சில தினங்கள் நேரத்தோடு செல்லலாம். சில தினங்கள் தாமதித்து செல்லலாம். எவ்வாறேனும் வாரத்திற்கு 40 மணித்தியாலங்கள் பணிபுரிய வேண்டும். அனைவரும் ஒரே நேரத்தில் பணியை ஆரம்பித்து ஒரே நேரத்தில் முடிக்கும் ஒழுங்குக்கு பதிலாக புதிய தொழிநுட்பத்தை பயன்படுத்தி பணிபுரியும் வகையில் நெகிழ்வுமிக்க நேர ஒழுங்கைக் கொண்ட முறை ஒன்று தொடர்பான அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார்.