விடுமுறை ரத்து செய்யப்பட்ட பின்னர் சேவைக்கு மீள் அழைக்கப்பட்ட இராணுவ வீரர்களை தங்க வைக்க கல்வி அமைச்சு இலங்கை ராணுவத்திற்கு 92 பாடசாலைகளை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சசின் செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்தா தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 70 பாடசாலைகளும், ஊவா மாகாணத்தைச் சேர்ந்த 6 பாடசாலைகளும், மத்திய மாகாணத்தைச் சேர்ந்த 4 பாடசாலைகளும், வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்த 11 பாடசாலைகளும் மற்றும் வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பாடசாலையும் இராணுவத்தின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இது தவிர, பி.பி. சரவணமுத்து மைதானமும் பொது நூலகமும் இராணுவ நோக்கங்களுக்காக பெறப்பட்டுள்ளதாக இராணவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.