கடந்த வருடம் அரச சேவையில் பயிலுனர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்ட சுமார் 53,000 பயிலுனர்கள் மூன்று கட்டங்களாக நிரந்தரமாக்கப்பட்டுள்ளது.
ஒரு வருட பயிற்சியை பூர்த்தி செய்த அனைவரும் நிரந்தரமாக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
இவர்களுக்கு அடிப்படை சம்பளமாக 31,000 ரூபாவும் கொடுப்பனவுகளுடன் சம்பளம் 41,000 ரூபாவாகவும் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
ஆட்சேர்ப்பு காலத்தைப் பொறுத்து, இவர்கள் அனைவருக்கும் மார்ச் மாதத்திற்குள் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்