பட்டதாரி பயிலுனர்கள் தொடர்பான இரண்டு சுற்று நிருபங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. பிரதேச செயலகங்களில் அனைத்துக் குடும்பங்களையும் மேற்பார்வை செய்தற்காக பட்டதாரி பயிலுனர்களை நியமித்தல் என்ற தலைப்பில் 31.3.2020 அன்று பொது நர்வாக உள்வாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சிகள் அமைச்சு ஒரு சுற்றிக்கையை வெளியிட்டுள்ளது.
எனினும் தேர்தல்கள் ஆணைக்குழு பட்டதாரி பயிலுனர்களை கோவிட் 19 பரவுவதைக் கட்டுப்படுத்தல் தொடர்பான சேவையில் பயிற்சிக்கு அழைத்தமை சிக்கலுக்குரியது என்ற தலைப்பில் 31.3.2020 அன்று சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
“வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தல் தொடர்பான பயிற்சி என்ற போர்வையில் பட்டதாரி பயிலுனர்களுக்கு வழங்குவதாக வாக்களிக்கப்பட்ட கொடுப்பனவை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் இது தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் நடைமுறைப்படுத்த முடியாத ஒன்று எனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
கோவிட் 19 வைரஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பொதியில் பட்டதாரி பயிலுனர்களுக்கு 20000 கொடுப்பனவு மார்ச் மாதத்திற்கான கொடுப்பனவாக அவர்களது வங்கிக்கணக்குகளில் இடப்படும் என ஜனாதிபதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் அரசின் எல்லா முயற்சிகளும் தேர்தல் காலத்தில் பிழையானது என்பதை மீண்டும் ஒரு முறை தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக் காட்டியுள்ளது.