பட்டதாரி பயிலுனர் நியனம் இடைநிறுத்தப்படவில்லை என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு இந்நியமனங்களை இடைநிறுத்தியதாக வரும் செய்திகள் வெறும் வதந்தி என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவ்வாறே விண்ணப்பித்தும் இது வரை நியமனங்கள் கிடைக்காதவர்கள் யாரேனும் இருப்பின் ஜனாதிபதி செயலகத்தையோ அல்லது பிரதேச செயலக காரியாலயங்களுக்கோ தமது முறையீட்டை சமர்ப்பிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சில ஊடகங்களில், தேர்தல்கள் ஆணைக்குழு பட்டதாரி பயிலுனர் நியனமத்தை நிறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது போலியான செய்தியாகும். தேர்தல்கள் ஆணையாளர் அவ்வாறான எந்த அறிவித்தலையும் விடுக்கவில்லை. பாராளுமன்றத்தைக் கலைக்கும் முன்னர் இதனை அரசியல் வேலைத்திட்டமாக முன்னெடுக்க வில்லை.
என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறே இன்றைய தினம் அனைத்து பிரதேச செயலகங்களினதும் செயலாளர்களுக்கும் பட்டதாரி பயிலுனர் வேலைத்திட்டம் தொடர்ான அறிவுறுத்தல் வழிகாட்டல்கள் ஜனாதிபதி செயலகத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
இதே நேரம், பிரதேச செயலகங்களுக்கு நியமனக் கடிதங்களுடன் சென்ற பல பட்டதாரிகள் தேர்தலின் பின்னர் வருமாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். நாடுமுழுவதும் போல இவ்வாறான சம்பங்கள் பதிவாகியுள்ளன.
தேர்தல்கள் ஆணையாளர் நேற்று கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதும் பட்டதாரி பயிலுனர் நியமனத்தை இரு மாதங்களுக்கு இடைநிறுத்துமாறு அரசைக் கேட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.