பட்டதாரரி பயிலுனர் நியமனத்திற்கான முழுப் பட்டியல் இன்று மாலை 4.30 வரையும் வெளியிடப்படவில்லை.
பட்டதாரி பயிலுனர் நியமத்தில் காணப்படும் குளறுபடிகளை முடிவுக்கு கொண்டுவரும் முகமாக, முழுப் பட்டியலையும் இன்று 11 ஆம் திகதி உள்நாட்டு நிர்வாக அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிப்படும் என கடந்த வாரம் அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.
எனினும் அலுவலக நேரம் கடந்த பின்னரும் குறித்த பட்டியல் வெளியிடப்படவில்லை. இன்று அப்பட்டியலை வெளியிடப்படும் சாத்தியம் இல்லை என்று அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.