பாடசாலை நடாத்த முடியாமல் போன நாட்களுக்கு பதிலாக வேறு நாட்களில் பாடசாலை நடாத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
இரண்டாம் தவணை இரு வாரங்கள் தாமதமடைந்தமையினால் அதனை நிவர்த்திக்கும் பொருட்டு பதில் நாட்கள் பாடசாலை நடாத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், ஆசிரியர்கள் தமது தவணைத் திட்டம் மற்றும் பாடங்களுக்கான ஒழுங்குகளை பொருத்தமான வகையில் மீளத் திட்டமிட்டடுக் கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிள்ளைகளின் வரவு குறைவாகக் காணப்படும் நாட்களிலும் பாடங்களை சாதாரண நாட்களைப் போன்று நடாத்திச் செல்லுமாறு அவர் ஆசிரியர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.