பரீட்சைகள் திணைக்கள ஊழியர் ஒருவரின் கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை தொடர்பில் வெளியான தகவல்கள் குறித்து பரீட்சைகள் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, பரீட்சைகள் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவில் கடமை புரியும் பெண் அதிகாரியின் கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மைத்தன்மை கிடையாது என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த பெண் அதிகாரியின் கணவருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் அடிப்படையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.