பரீட்சைகள் தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உயர் தரம் மற்றம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என்பதே தற்போதைக்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இறுதித் தீர்மானத்தை நாளை எட்ட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
மினுவங்கொடவில் கோவிட் -19 நோயாளிகள் கண்டறியப்பட்டதன் காரணமாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர் தரப் பரிட்சைகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ள தீர்மானிக்கப்படவில்லை என்றும் இறுதி முடிவு நாளை அறிவிக்க முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11 ஆம் திகதியும், உயர் தரப் பரீட்சை ஒக்டோபர் 12 முதல் நவம்பர் 06 வரை நடைபெற திட்டமிடப்பட்டிருந்து.
முன்னதாக பரீட்சைகள் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர், அனுஷா கோகுல பரீட்சைகள் ஒத்தி வைக்கப்படும் என்ற தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறிவித்திருந்தார். இதனை ColomboGazette.Com உறுதிப்படுத்தியிருந்த்து.
இருப்பினும் இன்று பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பான உறுதியான தீர்மானத்தை அடைய முடியவில்லை என்றும் எனவே, நாளை இது தொடர்பாக தீர்மானிப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.