பரீட்சைகளுக்கான திகதியை அறிவிப்பு செய்வதை தொடர்ந்தும் ஒத்தி வைப்பது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் இலங்கை சேவைகள் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளர் ஆசிரியர்கள் அல்லது அதிபர்களது தொழில் சங்கங்களுடன் இது தொடர்பாக எந்தக் சங்கங்களுடன் கலந்தாலோசனையும் மேற்கொள்ளாது தீர்மானம் எடுப்பது நடைமுறைச் சாத்தியமாக அமையாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொடர்ந்தும் அறிவிப்பு தாமதமடைவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
க.பொ.த உயர் தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நடாத்தப்படும் திகதி நாளை (ஜூலை 20) அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.