கம்பஹாவில் க.பொ.த. உயர் தரப் பரீட்சை நடைபெறும் பாடசாலை ஒன்றிலிருந்து கொரோனா பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக பாடசாலை பரீட்சை மண்டபத்தில் இருந்த 160 மாணவர்களுக்கு இன்று (19) முதல் விசேட நிலையம் ஒன்றில் பரீட்சை எழுத கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மினுவாங்கொடவில் உள்ள ஆடை தொழிற்சாலைக்கு அருகில் வசிக்கும் மாணவிக்கே இவ்வாறு, பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பின்னர், கம்பாஹா சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் வலயக் கல்வி அலுவலகத்திற்கு தெரிவிக்க சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இதன் காரணமாக, மாணவர் பரீட்சைக்கு அமர்ந்திருந்த மண்டபத்திற்கு பதிலாக மாணவர்களுக்கு மற்றொரு மண்டபத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கம்பஹா வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.கே. மல்லவராச்சி தெரிவித்தார்.
நிலைமை குறித்து பரீட்சை ஆணையருக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் இருந்து உயர் தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்களுக்கு தோற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் வலயக் கல்வி பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.