இவ்வருடம் தவணைப் பரீட்சைகள் உரிய முறையில் நடக்காத போதிலும் வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களும் புதிய வகுப்புக்கு வகுப்பேற்றப்படுவர் என கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
எனினும் முடிக்கப்படாத பாட உள்ளடக்கத்தை முடிப்பதற்கு 2021 முதல் இரு வாரங்களை ஒதுக்குவதற்கான செயன்முறை ஒன்றை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முதலாம் மற்றும் ஆறாம் தரங்களுக்கு புதிய மாணவர்களை உள்ளீர்ப்பு செய்வதை பெப்ரவரி வரை பிற்போடப்பட்டுள்ளது.
மார்ச் முதலாம் திகதி முதல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதால், தரம் 11 மாணவர்கள் அதுவரை பாடசாலைகளுக்கு வருகை தர முடியும்
அவர்களுக்கு வகுப்றை இட வசதி தேவைஎனில் தரம் 8, மற்றும் 9 மாணவர்களை தொகுதி அடிப்படையில் மாத்திரம் பாடசாலைக்கு வரவழைத்து தேவையான இடவசதிகளை பெற்றுக் கொள்ள முடியும்.
2021 முதல் தவணையில் வெளிக்கள செயற்பாடுகள் எதற்கு அனுமதி கிடைக்காது என்பதோடு, சுற்றுலாக்களும் இடம்பெறாது. அவ்வாறே விளையாட்டு விழாக்களுக்கும் அனுமதி கிடைக்காது என்று கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மூன்றாம் தவணை விடுமுறை டிசம்பர் 23 வழங்கப்பட்டு புதிய தவணை 2021 ஜனவரி 4 ஆம் திகதி ஆரம்பமாகும்.
2021 இன் கற்றல் செயற்பாடுகள் தொடர்பான விரிவான சுற்றுநிருபம் இவ்வாரம் வெளி வரும் என கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
.