இன்று மாலை, கல்வி அமைச்சில் பரீட்சைகள் தொடர்பாக நடைபெற்ற ஊடகவிலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள்.
ஊரடங்கு நடைமுறையில் உள்ள மாணவர்களுக்காக தனித்தனி விசேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
17 பொலிஸ் பிரதேசங்களில் தற்போது ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் 17 விசேட பரீட்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பரீட்சைக்குத் தோற்றும் மாணவருடன் பெற்றாரில் ஒருவர் பயணம் செய்ய முடியும் என்றும், ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பரீட்சை அனுமதி அட்டையை பயன்படுத்த முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் பயணிக்கும் போது, சமூக இடைவெளியைப் பேண வேண்டும், அவ்வாறே முகக் கவசமும் அணிய வேண்டும்.
கைகளை வீட்டில் கழுவிச் செல்ல வேண்டும். பாடசாலைக்கு சென்றும் கழுவ வேண்டும்.
நேர காலத்தோடு பரீட்சை மையத்துக்கு செல்ல வேண்டும்.
பாடசாலைகள் முழுமையாக பாதுகாப்பானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பெற்றார் வீணாக பயப்பட தேவையில்லை.
மாணவர்கள் பரீட்சைக்கு முன்னரும் பின்னரும் சுற்றித் திரியாமல் தேவையற்ற நடவடிக்கைகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
கம்பஹா பிரதேசத்தில் இருந்து வரும் மாணவர்கள் தனியாக வைக்கப்பட்டே பரீட்சை எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏனையவர்கள் பயப்படத் தேவையில்லை.
பெற்றார் பரீட்சை நிலையத்திற்கு முன்னால் கூடி இருப்பதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளியைப் பேண வேண்டும்.
மாணவர்கள் பரீட்சை முடிந்ததும் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும்.
வெளி மாவட்டங்களுக்கு கம்பஹாவிலிருந்து செல்லும் மாணவர்களுக்கு விசேட மையங்கள் கம்பஹாவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. எனவே, வெளிப்பிரதேசத்திற்கான போக்குவரத்து ஏற்படாது. கம்பஹாவிற்குள் இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்கள் இயங்கும். இரயில் சேவையும் இயங்கும்.
பரீட்சை ஆரம்பமாகும் முன்னரும் பரீட்சை முடிவடைந்த பின்னரும் பஸ்சேவைகள் மற்றும் புகையிரத சேவைகள் இயங்கும்
11 ஆம் திகதி காலையிலும் பிற்பலிலும் பொல்கஹவெல, நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களில் இருந்து கொழும்புக்கும் பின்னர் கொழும்பிலிருந்தும் விசேட இரயில் சேவைகள் இயங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர் தரம் ஆகியவற்றுக்கு தோற்றும் மாணவர்கள் உயர் தர மாணவர்கள் சுமார் 970000 பேரும் தரம் 5 மாணவர்கள் சுமார் 516000 பேரும் ஒன்லைன் முறையில் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
இப்பத்திரம் பரீட்சைக் காலையில் மாணவர்கள் ஊடாக வழங்கப்படும். அதனை நிரப்பித் தர முடியும்.
இந்த படிவத்தை ஒன்லைனில் நிரப்புவது கட்டாயமானதல்ல. முடியுமாக இருப்பின் மாத்திரம் நிரப்ப முடியும்.
ஊரடங்கு பிரதேசங்களில் இருந்து கொழும்பு வரும் மாணவர்கள் தமது தகவல்களை அனர்த்த முகாமை நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் இணைந்து அமைத்துள்ள நிலையத்திற்கு அறியத்தரவும்.
117
1988
0702117117
0113668032
01133668028
0113668029
0113668030
அவ்போது நாம் உங்களுக்கு தேவையான வினாப்பத்திரங்களை அச்சிட்டு விசேட நிலையத்தில் பரீட்சைகளை நடாத்துவது இலகுவாக அமையும்.
இலக்கம் வழங்கப்பட்டவுடன் அவர்களுக்கு தனிப்பட்ட வகையில் புதிய பரீட்சை நிலையம் தொடர்பாக அறிவிக்கப்படும்.
எந்த மாணவருக்கேனும் போக்குவரத்து வசதிகள் தேவை எனில், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்படும் பட்சத்தில் வசதிகள் செய்து தரப்படும்