எந்தவொரு காரணத்திற்காகவும் எந்தவொரு பரீட்சை நிலையத்திலும் மாணவர்களின் சுகாதாரத்தை உறுதி செய்யாத வகையில் அல்லது தேவையான சுகாதார வசதிகள் வழங்கப்படாவிட்டால் அல்லது பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால் உடனடியாக கல்வி அமைச்சின் துரித இலக்கமான 1988 க்கு அழைக்குமாறு கல்வி அமைச்சு பொதுமக்களைக் கோருகிறது.
நாட்டில் கோவிட் வைரஸ் பரவுவதால் ஏற்படும் அபாயத்தை கருத்திலெடுத்து, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து துறைகளின் முழு ஆதரவோடு மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியவகையில் பரீட்சையை நடாத்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகளுக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களின் முழுமையான ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கும், பரீட்சை நிலைய வளாகத்தின் கிருமி நீக்கம் மற்றும் தேவையான சுகாதார நடைமுறைகளை மேற்கொள்வதற்கும் அந்தந்த பரீட்சை நிலையங்களின் நிலைய அதிபர், உதவி அதிபர் அல்லது சிரேஷ்ட ஆசிரியரை மேலதிமாக கல்வி அமைச்சு நியமித்துள்ளது.
இந்த ஆண்டு க.பொ.த உயர் தரப் பரீட்சை ஒக்டோபர் 12 அன்று தொடங்கியது. நவம்பர் 06 வரை முடிவடையும்.
2648 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் இப்பரீட்சைக்கு 362,824 பேர் விண்ணப்பித்துள்ளனர்.