க.பொ.த உயர் தரப் பரீட்சை நடைபெறும் நிலையங்களில் சுகாதார வசதிகளை உறுதிப்படுத்துவதற்கு மேலதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
உயர் தரம் நடைபெறும் 2648 நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகளின் வதிகளை மேம்படுத்துவதற்கு பாடசாலை அபிவிருத்தி சங்கத்திற்கு ரூபா 15000 வழங்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த நிதியை இன்றைய தினமே வங்கிக் கணக்குகளில் இடுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிதி கல்வி அமைச்சின் சுகாதாரப் பிரிவின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. இது தற்போது பரீட்சை நிலைய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள முகக் கவசம், பாதுகாப்பு ஆடை மற்றும் கிருமி அழிப்பு தெளிப்பான்களுக்கு மேலதிகமாக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.