க.பொ.த உயர்தர மற்றும் ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறும் தினங்களில் மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காகவும் நாடளாவிய ரீதியில் சுமார் 7000 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படவிருப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்
மாணவர்கள் தமது பரீட்சை அனுமதிப்பத்திரத்தை ஊரடங்கு நேர அனுமதிப்பத்திரமாகப் பயன்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்
நாடளாவிய ரீதியில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவலுக்கான அச்சம் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட திகதிகளிலேயே க.பொ.த உயர்தரப்பரீட்சை மற்றும் ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சை என்பன நடத்தப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்திருந்தது