க.பொ.த . உயர் தரத்தில் ஒருவர் துறை சார்ந்து 03 பாடங்களையும், எல்லா துறையினரும் கட்டாயமாக பின்வரும் இருபாடங்களையும்
எடுக்க வேண்டும்.
01.பொது உளச்சார்பு
02.பொது ஆங்கிலம்
#பொதுஉளசார்பு
ஒருவர் பல்கலைக்கழக அனுமதியைப் பெறுவதற்கு, அடிப்படை தகுதியாக தான் தேர்வு செய்ததுறை சார்பான பிரதான பாடங்களில் ஆகக் குறைந்தது மூன்று பாடத்திலும் சித்தி (3S) எய்தி இருப்பதோடு,
பொது உளச்சார்பு பரீட்சையில் ஆகக் குறைந்தது 30புள்ளிகளைப்பெற்றிருக்க
வேண்டும். அவ்வாறு ஒருவர் 30 புள்ளிகளைப் பெற வில்லை எனின் 3A எடுத்தாலும் பல்கலைக்கழக அனுமதியைப் பெறமுடியாது
ஆனால், இவர் இத்தேவைப் பாட்டினை 03 தடவைக்குள் பூர்த்தி செய்யமுடியும். முன்னைய பரீட்சைப் பெறுபேறுடன் அடுத்து வரும் கல்வி ஆண்டில் பொது உளசார்பு பரீட்சைக்கு மட்டும் தோற்றினால் போதுமானது.
முக்கியமாக பரீட்சைப் பெறுபேறு கிடைத்த கல்வி ஆண்டுக்கே, பொதுஉளசார்பினை கருத்தில் கொள்ளாது கட்டாயம் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பம் செய்திருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட பரீட்சாத்திகள் பல்கலைக் கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு, மீதி இரண்டு தடவைக்குள் பொது உளசார்பு பரீட்சை முடிவு முப்பது புள்ளி / அதற்கு மேல் கிடைத்ததும் அடுத்த கல்வியாண்டில் இணைத்துக் கொள்ளப்படுவர். அல்லது போனால் தெரிவு பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்.
இவற்றினை விட, இவற்றுக்கு மேலாக பல (சுமார் 24 கற்கைகள் வரை) பாடநெறிகளுக்கு
சில பல்கலைக்கழகங்கள் பொது உளசார்பு பரீட்சைகளையும் நடாத்துகின்றன.
#பொதுஆங்கிலம்
பொது ஆங்கிலம் க .பொ .த .(உ .த )ல் இணைக்கப்பட்டாலும், அனுமதிக் கொள்கையில் பெரிய தாக்கம் எதனையும் கொண்டிருக்கவில்லை.
பட்டக்கற்கைகள் பெரும்பாலும் ஆங்கில மொழியில் இடம் பெறுகின்றபோதும், பொது ஆங்கிலம் சித்தியடைந்தாலும் அடையா விட்டாலும் பல்கலைக்கழகம் புக முடியும்.
ஆனால் சில கற்கை நெறிகளுக்கு க.பொ.த. (ச.த)ல் ஆங்கில பாடத்தில் சித்தி வேண்டப்படுகின்றது.
எனினும் தற்காலத்தில் ஒரு சில கற்கை களுக்கு பொது ஆங்கிலத்தில் சித்தி எதிர்பார்க்கப் படுகின்றது.
தொழில்நுட்பத்துறையை (பொறியில் /உயிர்முறைமை) தேர்வு செய்த மாணவர்கள் தங்களது பிரதானபாடம் 02ல் சித்தியுடன் பொது ஆங்கிலத்தில் சித்திபெற்றிருந்தால், இவர்கள் கழனிப் பல்கலைக்கழகத்தில்
#TESL பட்டக் கற்கையை தேர்வு செய்யமுடியும். இது தொழில்நுட்பதுறை சார்ந்த மாணவர்களுக்கு மட்டும் உரித்தானதாகும்.
இதனால் தொழில்நுட்பதுறை மாணவர்கள் பொது ஆங்கிலத்தில் அதிக சிரத்தை காட்டுவது நன்று. இதனை வழிப்படுத்து அதிபர், ஆசிரியர்களின் கடைமையும் ஆகும்.
#TESL – ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக கற்பித்தல்.
உங்கள்,
– சேரா –