எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் உட்பட நாட்டின் இயல்பு நிலையை வழமைக்குக் காெண்டுவருவதற்காக அரசாங்கம் தீர்மனித்துள்ளமையினால் அலுவலக நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களை மீள ஆரம்பித்தல் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தள மாவட்டங்களில் மக்களின் இயல்புவாழ்க்கை மீளத் திரும்புவதற்கான தீர்மானத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. எனவே, குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களின் செயற்பாடுகளை எதிர்வரும் 11 ஆம் திகதி மீள ஆரம்பிப்பதற்கான நடடிக்கைகளை மேற்காெள்ளுமாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊழியர்கள் கடமைக்குத் திரும்புவது தொடர்பான அறிவித்தலையும் வழிகாட்டலையும் நிறுவனங்களின் தலைவர்கள் அறிவிப்பதாகவும்
பல்கலைக்கழகங்களின் விரிவுரைகளை ஆரம்பிப்பது தொடர்பாக அரசாங்கம் பின்னர் அறிவிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.