2018ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராத உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்கள் மீள் மதிப்பீடு செய்யப்பட்டதன் பின்னரான பெறுபேறுகள் பல்கலைக்கழக மானியங்கள் குழுவுக்கு இன்று அனுப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
விடைத்தாள்களை மீள் மதிப்பீடு செய்வதற்காக 68 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் அனுப்ப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீள் மதிப்பீட்டின்போது தசம் 3சதவீதமான பெறுபேறுகளில் மாத்திரமே மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மீள் மதிப்பிடு செய்யப்பட்ட பெறுபேறுகள் பல்கலைக்கழகங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டதன் பின்னர் புதிய கல்வி ஆண்டுக்கு மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்பட இருக்கிறார்கள்.
வெட்டுப்புள்ளிகளும் விரைவில் வெளியிடப்பட இருக்கின்றது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். சகல பல்கலைக்கழகங்களிலும் பாதுகாப்பு பிரிவினர் தேடுதல்களை மேற்கொண்டு வருகிறார்கள் என்று மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.