பல்கலைக்கழகங்கள் ஆரம்பிப்பது தொடர்பாக அடுத்த வாரம் முதல் தினங்களில் சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடல்களைத் நடாத்த தயாராகுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, கோவிட் தொற்றுநோயுடன், மாணவர்களின் தங்குமிட வசதிகள், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் விரிவுரையாளர்களின் உடல்நலம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு கலந்துரையாடக்லளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் பரிந்துரைகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானம் எட்டப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.