சம்பள முரண்பாடுகளை முன்னிறுத்தி தொழில் சங்கப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பல்கலைக்கழக தொழில்சங்கங்களின் ஒருங்கிணைந்த குழு அறிவித்துள்ளது.
இம்மாதம் 29, 30 ஆகிய திகதிகளில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக தொழல்சங்கங்களின் ஒருங்கிணைந்த குழுவின் தலைவர் தம்மிக எஸ். பிரியன்த தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் சம்பள முரண்பாடுகள் மற்றும் இதர சில கோரிக்கைகளை முன்வைத்து அதிபர் ஆசிரியர்களின் தொழில் சங்கங்களும் 30 ஆம் திகதி பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.