பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் மேற்கொண்ட அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக பல பல்லைக்கழங்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கல்வி சாரா ஊழியர்கள் தொழிற்சங்கங்கள் சம்பள முரண்பாட்டைத் தீர்த்தல், மாதாந்த விசேட கொடுப்பனவை அதிகரித்தல், பல்லைக்கழக வேலைவாய்ப்பின் போது பொது பரீட்சையை முறையை நடைமுறைப்படுத்தல் மற்றும் கடன் வசதிகளை மேம்படுத்தல் முதலான கோரிக்கைகள் உட்பட 11 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் குதித்துள்ளன.
அதிகாரிகள் தமது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காவிட்டால் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை தாம் தொடரவுள்ளதாக தொழில் சங்கங்களின் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க பிரியன்த எச்சரித்துள்ளார்.
எனினும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெற்றதாகவும் 90 வீதமான கல்வி சாரா ஊழியர்கள் கடமைக்கு சமூககளித்திருந்தனர் என்றும் அறிவிக்கப்படுகின்றது.
இவ்விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நிதி அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக அறிவித்துள்ளது.