அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக முறையான திட்டத்தை வகுக்க வேண்டும் என்று அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் அமைப்பாளர் சங்கைக்குரிய.ரத்கரவ்வே ஜினரதன தேர்ர் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு ஒரு திட்டத்தை வகுத்திருப்பதாகவும், அதன் நோக்கம் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதல்ல மாறாக ஒரு தொற்றுநோய் என்ற போர்வையில் மாணவர் நடவடிக்கைகளைத் கட்டுப்படுத்துவதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த திட்டத்தை தயாரிக்க பல்கலைக்கழகத்திற்கு போதுமான சந்தர்ப்பத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்காவுக்கு எழுதிய கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்