2020 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை மே மாதம் 21 ஆம் திகதி முதல் விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
விண்ணப்ப முடிவுத் திகதி ஜுன் மாதம் 11 ஆம் திகதியாகும்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரசிங்க கருத்துக்கைளத் தெரிவித்தார்.
செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் பின்வருமாறு:
- பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் அடங்கிய கைநூல் எதிர்வரும் மே 21 ஆம் திகதி முதல் பெற்றுக் கொள்ளலாம்.
- இணையவழியாக கட்டாயமாக விண்ணப்பிக்க வேண்டும்
- நிரப்பப்பட்ட விண்ணப்பங்களின் அச்சுப் பிரதிகளை பதிவுத் தபாலில் ஆணைக்குழுவிற்கு அனுப்புவதும் கட்டாயமானது.
- [email protected] என்ற மின்னஞ்சல் முகவிரிக்கு அனுப்ப வேண்டும்.
- விண்ணப்ப கைநூலை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இணையத்தின் ஊடாக தரவிறக்கம் செய்யலாம்.
- 41755 இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படவுள்ளனர்.
- விண்ணப்பத்தில் ஏற்படும் தவறுகள் காரணமாக பலருக்கு பல்கலைக்கழக வாய்ப்பு கைநழுவியுள்ளது.
- இணைய விண்ணப்பத்தை நிரப்ப முன்னர், கைநூலின் 5 ம் பிரிவை முழுமையாக வாசிக்குமாறு மாணவர்களை அறிவுறுத்துகிறேன்.
- விண்ணப்பத்தை நிரப்ப முன்னர், உங்கள் மின்னஞ்சல் இயங்குகின்றதா என்பதை சரி பார்த்துக்கொள்ளவும் அது உங்களுடையதாக இருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் போது உங்கள் கைத் தொலை பேசி இலக்கத்தை சரியாக இடுங்கள்
- உயர் தரத்திற்கு தோற்றிய பாடங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்க முடியுமான அதிசகூடிய பாடநெறிகளுக்கு விண்ணப்பியுங்கள்
- விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முன்னர், அவற்றை முழுமையாக சரிபார்த்துக் கொள்ளுங்கள்
- அச்சுப்பிரதியை அனுப்பு முன்னர், உரிய இடத்தில் ஒப்பமிடுங்கள்