பாடசாலைகளில் குழப்பத்தை ஏற்படுத்தி சமூக முரண்பாடுகளை ஏற்படுத்த வேண்டாம்.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.
திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் ஊடக வாயிலாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோளை முன்வைத்துள்ளதோடு, மாணவர்களையும், பெற்றோரையும் ஆத்திரமடையச் செய்து சமூக இன முரண்பாடுகளை உருவாக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம்.
ஒரு தனி மனித உரிமை என்பதற்கு அப்பால் மிகப் பெரிய சமூகம் சார்ந்த பாடசாலையை நாம் மனதில் இருத்த வேண்டும்.
அதிலும் ஆசிரியர்களுக்கு இவ்விடயம் தொடர்பில் அவதானத்துடன்கூடிய கரிசனை இருக்க வேண்டும்.
பொருத்தமில்லாத செயற்பாடுகளை ஒட்டு மொத்த சமூகமும் ஏற்றுக்கொள்ளவில்லையெனில் நாம் நமக்குப் பொருத்தமான இடத்தைத் தேடிக்கொள்ளவேண்டும்.
அதை விடுத்து முரண்பாடான செயற்பாடுகளுக்காக அரசியல்வாதிகளையும், இன குரோத செயற்பாட்டாளர்களையும் துணைக்கு அழைப்பது ஆசிரியருக்கு அழகானது அல்ல.
எனவே கல்வி அமைச்சும், கல்வித் திணைக்களமும் இதற்கு விரைந்து தீர்வுகாணவேண்டும்.
குறித்த ஆசிரியரை அவர் விரும்பும் பிறிதோர் பாடசாலைக்கு இடமாற்றம் செய்து புகழ்மிக்க பாடசாலையின் செயற்பாடுகள் சீராக வழிசமைக்க வேண்டும்.