Teacher Vacancies in Religious Subjects (National Schools and Provincial Schools) Teachers Vacancies in National Schools
பாடசாலைகளில் காணப்படும் சமயப்பாட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் தொடர்பாக கல்வி அமைச்சு தரவுகளை வெளியிட்டுள்ளது.
எதற்காக இவ்வாறான தரவுகளை திடீரென கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது என்ற விபரங்களை அறிய முடியவில்லை
எனினும், சுமார் ஒன்றரை வருடத்திற்கு முன்னர் சமயப்பாட ஆசிரியர் நியமனத்திற்கான விண்ணப்பம் கோரப்பட்டு பரீட்சை நடாத்தப்பட்டு, நேர்முகத் தேர்வுக்கும் அழைக்கப்பட்டு, பின்னர் நேர்முகப் பரீட்சை பிற்போடப்பட்டமை நினைவுபடுத்தத் தக்கது.
எனினும் இந்தத் தரவுகளுக்கும் அந்த நியமனத்திற்கும் ஏதும் தொடர்புள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.
இதன்படி, பௌத்த சமயத்துக்கு தேசிய பாடசாலைகளில் 45 வெற்றிடங்கள் காணப்பட்டதாகவும் தேசிய கல்வியியல் கல்லூரிகளில் இருந்து 56 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிகமாக 11 பேர் இருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன
அவ்வாறே, தேசிய பாடசாலைகளில் இந்துசமயத்திற்கு 7 வெற்றிடங்களும், இஸ்லாம் பாடத்திற்கு 29 வெற்றிடங்களும் கத்தோலிக்க சமயத்திற்கு 7 வெற்றிடங்களும் கிறிஸ்தவ சமயத்திற்கு 4 வெற்றிடங்களும் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
மாகாணப் பாடசாலைகளில் புத்த சமயத்திற்கு 12 வெற்றிடங்களும், இந்து சமயத்திற்கு மேலதிகமாக 9 பேரும், இஸ்லாத்திற்கு 3 வெற்றிடங்களும் கத்தோலிக்க சமயத்திற்கு 3 வெற்றிடங்களும், கிறிஸ்தவ சமயத்திற்கு 43 மேலதிக ஆளணியினரும் காணப்படுவதாக கல்வி அமைச்சின் தரவுகள் குறிப்பிடுகின்றன.