பாடசாலைகளில் விழாக்களை நடத்துவதை உடனடியாக நிறுத்துங்கள் – கல்விச் செயலாளர்
பாடசாலைகளில் நடாத்தப்படும் அனைத்து விழாக்களையும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு அனைத்து மாகாண வலய, கொத்தணி கல்வி அதிகாரிகள, மற்றும் அதிபர்களுக்கு கல்வி அமைச்சின் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
கோவிட் 19 தொற்று நிலவும் ஆபத்தான மற்றும் பாதுகாப்பற்ற நிலைமைகளுக்கு மத்தியிலும் பல்வேறு பாடசாலைகள் பல்வேறு விழாக்களை நடத்தி வருவதாகவும், விழாக்களை ஒழுங்கு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் நடாத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள விழாக்கள் மற்றும் இதன் பிறகு நடாத்துவத்றகு திட்டமிடப்பட்டுள்ளவை அனைத்தையுமு் மறு அறிவித்தல் வரை நிறுத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.