பாடசாலைகளின் பாதுகப்பை உறுதிப்படுத்துவற்காக சிசிடிவி கமராக்களை பொருத்தவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதற்கான செலவுகளை கல்வி அமைச்சு ஏற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.