கல்வி அமைச்சு ஜனவரியில் மீண்டும் பாடசாலைகளைத் திறக்கத் தயாராகி வருகின்ற போதிலும், சுகாதார அமைச்சு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார மற்றும் கல்வி அமைச்சுகளின் உயர் அதிகாரிகளுக்கு இடையே சுகாதார அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து டிசம்பர் 31 க்குப் பிறகு விவாதித்து முடிவெடுக்க முடிவு செய்யத் தீர்மானிக்கப்பட்டது.
அனைத்து பாடசாலைகளையும் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நாடு முழுவதும் நடத்துவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்,
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு மீட்டல் வகுப்புகளை நடத்த அனுமதி கோரப்பட்டாலும், சுகாதார அமைச்சு அனுமதி வழங்கவில்லை.