பாடசாலைகளை மீளத் திறப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக மாகாண, வலய அதிகாரிகளை அறிவுறுத்தும் சுற்று நிருபம் நாளை (11) வெளியிடப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்திரானந்த தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முன்னர் நிறைவேற்ற வேண்டிய கிருமிநீக்க செயன்முறை குறித்து இச்சுற்று நிருபம் விளக்கங்களைக் கொண்டிருக்கும்.
பாடசாலைகளை மீள ஆரம்பித்த முதல் வாரத்தில் பெற்றாரை பாடசாலைக்கு அழைத்து தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட வேண்டும் என செயலாளர் தெரிவித்தார்.
கிருமிநீக்கம், மாணவர்களுக்கான குடிநீர் ஒழுங்கு, வகுப்பறையில் மாணவர்களை அமர்த்தும் ஒழுங்கு முதலான அம்சங்கள் குறித்து நாளை வெளியிடப்படும் சுற்று நிருபம் விபரங்களைக் காெண்டிருக்கும் என அவர் தெரிவித்தார்.