கொரோனா தொற்று நிலமையின் கீழ் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது மற்றும் எதிர்கால பரீட்சைகள் குறித்து தீர்மானம் எடுப்பதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று காலை நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சூம் செயலி மூலம் கல்வி அமைச்சின் செயலாளரின் தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கலந்துரையாடலில் கல்வி ராஜாங்க அமைச்சகங்களின் செயலாளர்கள் மற்றும் கல்வித்துறை வல்லுநர்கள் பலர் கலந்து கொள்வர்.
இந்த கலந்துரையாடலில் நாட்டின் கல்வி எதிர்காலம் குறித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபிலா பெரேரா தெரிவித்தார்.