முப்படை மற்றும் பொலிஸ் விஷேட அதிரடி படையின் பாதுகாப்புடன் பாடசாலைகள் ஆரம்பமாகின. இன்றைய தினம் தரம் 6 இற்கு மேற்பட்ட கல்வி பயிலும் மாணவர்களுக்கான பாடசாலைகள் ஆரம்பமாகின.
எனினும் பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவு மிகவும் குறைவாகக் காணப்படுவதாக அறிய முடிகின்றது. குறிப்பாக நகர்ப்புறப் பகுதிகளில் மாணவர்களின் வரவில் பாரிய வீழ்ச்சியை அவதானிக்க முடிகின்றது.
கடந்த நாட்களில் ஊடகங்கள் மேற்கொண்ட பிரச்சாரத்தின் விளைவாக ஏற்பட்ட அச்சம், மற்றும் நேற்று இரவு நீர்கொழும்பில் ஏற்பட்ட பதட்டநிலை காரணமாக மாணவர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிக்காமல் இருந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இரண்டாம் தவணை பாடசாலை ஆரம்பம் 2 கட்டங்களின் கீழ் மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது. இதற்கமைவாக எதிர்வரும் திங்கட்கிழமை தரம் 1 முதல் தரம் 6 வரையிலான பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.