பாடசாலைகள் மீள ஆரம்பித்து இரு வாரம் வரை பல்கலைக்கழக விண்ணப்ப கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு முன்னதாக கோரப்பட்ட விண்ணப்ப கால முடிவு ஏப்ரல் 9 ஆக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் விண்ணப்பதாரிகள் பாடசாலைகள் மூடப்பட்டள்ளதால் எதிர்நோக்கிய பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இத்தீர்மானத்தை அறிவித்துள்ளது.
2019 க.பொ.த உயர் தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்ககழங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டு பின்னர் இரு வாரங்கள் வரையாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.