80,000 சிறுவர்களுக்கு வீடுகளுக்குஉலர்உணவுகளைஎடுத்துச் செல்வதற்கு உலகஉணவுத் திட்டமும்,அவுஸ்திரேலியஅரசாங்கமும் உதவுகின்றன.
தேசிய பாடசாலைகளில் உணவு நிகழ்ச்சிக்குள் உள்ளடங்கும் சிறுவர்களுக்கான உலர் உணவுப் பொருட்களை அவர்களது வீட்டுக்குக் கொண்டு சென்று வழங்குதற்கான அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டமும் வெளிவிவகார, வர்த்தகத்திற்கான அவுஸ்திரேலிய திணைக்களமும் இணைந்து ஆதரவளிக்கின்றன.
மதியவேளை உணவுக்குப் பதிலாக பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை அவர்களது வீடுகளுக்குக் கொண்டு சென்று வழங்குவதன் முதலாவது கட்டமாக, 80,000 சிறுவர்களுக்கு உணவுப் பொதிகளை கொள்வதற்கும் அவர்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்கும் கல்வி அமைச்சுக்கு 40,000 அமெரிக்க டொலர் (ரூபா 74 மில்லியன்) நிதி வழங்கப்பட்டுள்ளது.
கொவிட் -19 காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையால், பாடசாலைகளால் வழங்கப்படும் மதியஉணவைப் பெற்றுக் கொள்ள முடியாத சிறுவர்களின் ஊட்டச்சத்து நிலைபாதிக்கப்படக் கூடும்.
எனவே சிறுவர்களுக்கு ஊட்டச்சத்தை தொடர்ச்சியாக வழங்கும் பொருட்டு வீடுகளுக்கு உலர் உணவுப் பொருட்களை கொண்டு செல்லும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
ஒரு மாதத்திற்குப் போதுமான முட்டைகள், பயறு வகைகள் மற்றும் கல்வி அமைச்சினால் குறிப்பிடப்பட்ட பிற உலர் உணவுப் பொருட்கள் போன்றன இப்பொதியில் அடங்கியுள்ளன.
தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான உலர் உணவுப் பொதிகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வின் தொடக்க வைபவம் இராஜகிரிய, களபளுவாவவில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தார்த்த மகாவித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது.
கல்வி அமைச்சின் செயலாளர் என். எச். ஏம்.சித்ரானந்த மற்றும் உள்ளகவர்த்தகம், உணவுப் பாதுகாப்பு, நுகர்வோர் நலன் செயலாளர் பத்ரானி ஜயவர்த்தன ஆகியோருடன் இணைந்து உலக உணவுத் திட்டத்தின் வதிவிடப் பணிப்பாளர் பிரென்டாபார்டன் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் உலகின் மிகப் பெரிய மனிதாபிமான அமைப்பாகும். இது அவசர காலங்களில் மக்களின் உயிர் காக்கிறது.
மோதல்கள்,பேரழிவுகள் மற்றும் காலநிலைமாற்றத்தின் தாக்கத்திலிருந்து மீண்டு வருபவர்களுக்கு நிலையான எதிர்காலத்துக்காக ஆதரவு வழங்குகிறது
(மேலதிக தகவல்களுக்கு: டான்யா ஜான்ஷ், தொலைபேசி 1094 769 102462)
தினகரன்