மே 11 ஆம் தேதி பாடசாலைகளின் இரண்டாம் தவணையைத் தொடங்க முடியாது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.
நேற்று சிறுவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சிறுவர்கள் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் க.பொ.த உயர் தர தேர்வு குறித்தும் பிரதமரிடம் விசாரித்தனர்.
பரீட்சையைப் பொறுத்தவரையில் இரு தெரிவுகள் உள்ளன. ஒன்று பரீட்சையை ஒத்திவைப்பது, இரண்டாவது குறிப்பிட்ட பாட அலகைகுகளை மட்டுமே உள்ளடக்கிய வகையில் பரீட்சையை நடாத்துவது.
இருப்பினும், இது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பிரதமர் கூறினார்.
இதற்கிடையில், சமூக ஊடகங்களில் பரிமாறிக்கொள்ளப்பட்ட சில தகவல்களின் படி, இரண்டாம் தவணைக்காக ஜூன் 16 மற்றும் ஜூன் 20 பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இது தொடர்பாக வினவியபோது, கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் இதனை மறுத்தனர்.
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர்.
Sir, இரண்டாம் தடவை பரீட்சை தோற்றும் 100 இற்கு மேற்பட்ட மாணவர்கள் யாழ்பாணத்தில் கல்வியை மேற்கொண்டோம் எங்களது theory & question papers அங்குதான் உள்ளது அதனை எப்படியாவது பெற்று தருமாறு கேட்டுகொள்கிறோம்
june 20 saturday!!!!!!