ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட ஹட்டன் போஸ்கோ வித்தியாலயத்தின் தரம் 6 மாணவர்கள் 100 பேரை பாடசாலை ஆரம்பித்து சற்று நேரத்திலேயே பெற்றோர் வீடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இப்பாடசாலையில் சுமார் 80 வருட பழைமையான கட்டடம் ஒன்றில் தரம் 6 மற்றும் 7 மாணவர்களுக்கான வகுப்பறைகள் இயங்குவதாகவும், தற்போதைய மழைக் காலநிலையில் கட்டடம் இடிந்து விழும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவித்த பெற்றோர், குறித்த கட்டடத்தில் மாணவர்கள் கற்றலில் ஈடுபடுவது பொருத்தமானதல்ல எனத் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கென கல்வி அமைச்சின் நிதியளிப்பின் கீழ் புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டள்ளதாகவும் அக்கட்டடத்தில் தரம் 6, 7 மாணவர்களுக்கு வகுப்பறை வழங்க முடியாது என்று அதிபர் பிடிவாதம் பிடிப்பதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறித்த கட்டத்தை திறந்து அதில் தமது பிள்ளைகளுக்கான வகுப்பறையை அமைக்கும் வரை பிள்ளைகளை பாடசாலை அனுப்புவதில்லை என்றும் விரைவில் குறித்த கட்டத்தை திறக்குமாறும் கூறி பெற்றோர் அதிபரிடம் கடிதம் ஒன்றை ஒப்படைத்துள்ளர்.