பாடசாலைகளின் நீர் பயன்பாட்டு இணைப்புக்களுக்கான கட்டணத்தை செலுத்துவதற்கு கல்வி அமைச்சு இதன் பிறகு நிதி ஒதுக்கீடு செய்யாது என அனைத்து பாடசாலைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கட்டணத்தை செலுத்துவதற்கான மாணவர்களிடம் கட்டணம் அறவிட அதிபர்கள் பலர் முயற்சி செய்வதாகவும், இதன் காரணமாக அந்த சுமையை பெற்றார் ஏற்க வேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சுமையையும் பெற்றார் மீது சுமத்தாது, நீர் கட்டண ஒதுக்கீட்டை நிறுத்தியமையை வாபஸ் வாங்குமாறு கல்வி அமைச்சிடம் தான் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.