மாதிவலயில் அமைந்துள்ள சிரி ராஹுல வித்தியாலத்தின் பெயரை இசுரு வித்தியாலயம் என மாற்றம் செய்து அண்மையில் திரை நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணைக்குட்படுத்தப்படும் என மேல்மாகாண ஆளுனர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவபிரிய தன்னுடைய பெயரை இட்டு குறித்த வித்திலாயலயத்தின் பெயர் பலகையை அண்மையில் திறந்து வைத்தார்.
இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் இவ்விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது.
இது தொடர்பாக மேல்மாகாண ஆளுனரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட போது, இவ்விவகாரத்தை விசாரிக்க உள்ளதாகவும் ஜனாதிபதியின் தலையீட்டைக் கோரவுள்ளதாகவும் ஆளுனர் தெரிவித்தார்.
எனினும், குறித்த பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்தவர் ஜனாதிபதி மைத்திரி பால சிரி சேன என்பது குறிப்பிடத் தக்கது.