அரசாங்கத்தினால் பிரேரிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களுக்கான போசனை உணவுப் பொதி வழங்கும்திட்டத்திற்காக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் World Food Program ரூபா 80 மில்லியன் நிதியுதவியை வழங்குவதற்கு உடன்பட்டுள்ளது.
அத்தோடு கோவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் நாடடினுள் ஏற்பட்டுள்ள நிலமையைக் கருத்திற்கொண்டு சுகாதார அடிப்படை வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தெரிவு செய்பயப்பட்டுள்ள 100 பாடசாலைகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்காகவும் பாடசாலை சமயலறை யை நிர்மாணிப்பதற்காகவும் முன்மொழியப்பட்டுள்ள திட்டத்திற்காக ரூபா 6 மில்லியனம் வழங்குவதற்கும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அலகபெரும அவர்களின் தலைமையில் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் இலங்கைப் பணிப்பாளர் திருமதி Brenda Barton அவர்கள் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்ட விசேட கலந்துரையாடல் இன்று கல்வி அமைச்சில் நடைபெற்ற போதே இவ்வுடன்பாடுகள் எட்டப்பட்டன.