பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயம் அனில் ஜாசிங்க கல்வி அமைச்சுக்கு வழங்கிய வழிகாட்டலில் பாடசாலை மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனினும். பாடசாலை மாணவர்களுக்கு முகக் கவசம் அணிதலை தான் அனுமதிக்க வில்லை என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.
கடந்த 20 ஆம் திகதி சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியயாச்சி யின் தலைமையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பபா பலிஹவடன இக்கருத்தைத் தெரிவித்தார். பாடசாலை நேரத்தில் மாணவர்கள் முகக் கவசம் அணிவதனால் பாடசாலை மாணவர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. உரிய தரத்தில் அல்லாத முகக் கவசங்கள் சந்தையில் மலிந்து விட்டன. இவற்றை அணிவதன் மூலம் வேறு பல நோய்கள் ஏற்படும் அபாயம் நிலவுவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
எனினும், பாடசாலைக்கு வரும் போதும் பாடசாலையை விட்டுச் செல்லும் போதும் பாடசாலை மாணவர்கள் தமது பெற்றாரின் விருப்பின் படி முகக் கவசம் அணிய முடியும்.
பாடசாலை மாணவர்களிடையே ரைஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக யுனிசெப் வெளியிட்டுள்ள வழிகாட்டலிலும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என வலியுறுத்தப்படவில்லை. அதனை விட அடிக்கடி கைகளைக் கழுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றே யுனிசெப் முக்கியத்துவம் வழங்கி பரிந்துரைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.