பாடசாலை போக்குவரத்து வேன் கட்டணங்கள் திங்கட்கிழமை (03) முதல் 20% அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அகில இலங்கை மாகாண பாடசாலை சிறுவர் போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் தலைவர் ருவன் பிரசாத், டீசல் நிவாரணத்தை அரசாங்கம் வழங்கலாம் என சங்கம் முன்வைத்த போதிலும் அதற்கான எந்த நடவடிக்கையும் அரசாங்கம் எடுக்கவில்லை என தெரிவித்தார்.
சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவிக்கையில், திங்கட்கிழமை (03) முதல் பாடசாலை வேன்களின் கட்டணத்தை 20% அதிகரிப்பு அமுல்படுத்தப்படும் என தயக்கத்துடன் பெற்றோர்களிடம் கூற உள்ளதாக தெரிவித்தார்.