பாடசாலை மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு கல்வி வெளியீட்டுத் திணைக்களம் ரூ .20கோடிக்கும் அதிகமாக மேலதிகமாக செலவிட வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாட புத்தகங்களை அச்சிடுவதற்காக தனியார் துறையிலிருந்து அச்சிடும் காகிதத்தை வழக்கத்தை விட அதிக விலைக்கு அரச அச்சகத் திணைக்களம் வாங்குகிறது என்பதே இதற்குக் காரணம்.