NVQ பாடநெறி ஒன்றைத் தொடரமுன்னர் பாடநெறியைத் தொடர்வதற்கு தெரிவு செய்துள்ள நிலையம் அல்லது பயிற்சி நிலையம் மூன்றாம் மற்றும் தொழில் கல்விக்கான ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்றும் பார்க்குமாறு மூன்றாம் மற்றும் தொழில் கல்விக்கான ஆணைக்குழு கேரிக்கை விடுத்துள்ளது.
1990 ன் 20 ஆம் இலக்க சட்டமூலத்தின் 14 ஆம் பகுதியின் படி அனைத்து அரச மற்றும் தனியார் தொழில் பயிற்சி நிலையங்களும் பதிவு செய்வது கட்டாயமானதாகும்.
மேலதிக விபரங்களுக்கு மற்றும் பதிவு செய்யப்பட்ட நிலையங்களின் பட்டியலை பார்வையிட www.tvec.gov.lk என்ற இணையத்தள முகவரிக்கு பிரவசிக்குமாறு ஆணைக்குழு பெற்றார் மற்றும் மாணவர்களை வேண்டியுள்ளது.