43 பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த இரண்டு மூன்று தினங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் அது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பாராளுமன்றத்தின் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ அந்த பத்துப் பேருக்கும் பாராளுமன்றத்திற்குள் இருந்து கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமைக்கான எந்த ஆதாரமும் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளவர்களில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்குவதாகவும் அவர் கூறினார்