எதிர்வரும் மே 9-10 ஆகிய தினங்களில் ஆசிரியர்கள் அனைவரும் பாரிய தொழில் சங்க நடவடிக்கைகளில் இறங்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற சுகயீன விடுமுறைப் போராட்டம் பெரும் வெற்றி கண்டும் அரசாங்கம் ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பாக எவ்வித கரிசனையுமின்றி வழமையான அறிக்கை அரசியல் செய்து கொண்டிருக்கின்றது.
எனவே, ஆசிரியர்கள் மீண்டும் ஒருமுறை மாபெரும் தொழில் சங்க நடவடிக்கைகளில் இறங்கத் தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த ஆசிரியர்கள் தொழில் சங்கம் அறிவித்துள்ளது.
சுமார் 30 தொழில் சங்கங்கள் எதிர்கால நடவடிக்கை குறித்து நேற்று கொழும்பில் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தின. அக்கலந்துரையாடலிலே இத்தீர்மானம ்பெறப்பட்டடுள்ளது.
சம்பள உயர்வு, பத்திரங்களை நிரப்பும் செயற்பாடுகளை குறைத்தல், கல்விக்கு மொத்த தேசிய உத்பத்தியில் 6 வீதம் ஒதுக்குதல், ஓய்வூதியத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவர வலியுறுத்தல் முதலான கோரிக்கைகளை முன்வைத்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.