சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாச்சி, மற்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அவர்களுடனான கலந்துரையாடல்களுக்குப் பிறகு, இம்மாதம் 30 ஆம் தேதி முதல் பாலர் பாடசாலை கலைவிழாக்களை சுகாதார விதிகளைப் பேணி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு, முன் பள்ளிகள் மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலை உள்கட்டமைப்பு மற்றும் கல்விச் சேவைத் துறை அமைச்சர் பியால் நிஷாந்தா தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுநோயை அடுத்து நாட்டின் நிலைமை காரணமாக பல்வேறு முன் பள்ளி இசை நிகழ்ச்சிகளை நிறுத்த சுகாதார அமைச்சும் கல்வி அமைச்சும் நடவடிக்கை எடுத்திருந்தன.
கொரோனா காலத்தில் அழுத்தங்களுக்கு உட்டபட்டிருந்த குழந்தைகளுக்கு ஒரு புதிய உத்வேகம் அளிப்பதே இந்த முடிவுக்கு முக்கிய காரணம் என்று ராஜாங்க அமைச்சர் கூறினார்.
30 ஆம் தேதி பத்தரமுல்லவில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் பேசினார்.
குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள முன்பள்ளி இசை நிகழ்ச்சிகள் தற்காலிகமாக மீண்டும் நடத்தப்படக்கூடாது என்று ஆரம்பத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தாலும், குழந்தைகளின் மன திருப்திக்காக அவை மீண்டும் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
‘‘ ஏராளமான முன்பள்ளி ஆசிரிய சங்கங்கள் மற்றும் ஆசிரியர்கள் எம்முடன் பல்வேறு முன்பள்ளி இசை நிகழ்ச்சிகளை மீண்டும் நடத்துவது குறித்து ஆலோசித்தனர். அவர்களுக்கு இப்போது அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. கல்வி அமைச்சருடன் கலந்துரையாடினோம்.
சுகாதாரம், நீர் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை தேவைகள் இல்லாத பள்ளிகளுக்கு நிதி உதவி வழங்க பல நிறுவனங்கள் இணைந்து செயல்படுகின்றன. இந்த குழந்தைகளுக்கான எங்கள் பொறுப்பை நிறைவேற்றும் கடமை எங்களுக்கு உள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் 31 க்கு முன்பு இதைச் செய்வோம் என்று நம்புகிறோம் என்றும் அவர் கூறினார்.