பின்தங்கிய பிரதேச பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு – கல்வி அமைச்சர்
பின்தங்கிய மற்றும் வசதிகளற்ற பிரதேச பாடசாலைகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் சம்பளத்துக்கு மேலதிகமாக கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கல்வி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
கேகாலையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அமைச்சர் உரையாற்றினார். இலங்கையில் மொத்த ஆசிரியர் எண்ணிக்கையில் 70 சதவீதமானவர்கள் பட்டதாரிகள் அல்லாத ஆசிரியர்கள் ஆவர்.
ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களில் 25 சதவீதமானவர் பயிற்சி அற்ற ஆசிரியர்கள் ஆவர் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் கல்வியுடன் கூடிய உலக நாடுகளில் எந்தவொரு நாட்டிலும் பட்டதாரி அல்லாத ஆசிரியர்கள் இல்லை என்று தெரிவித்த அமைச்சர் 2027 ஆம் ஆண்டளவில் பாசாலை கட்டமைப்பிற்குள் உள்ள அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
19 கல்வியற் கல்லூரிகளும் பட்டங்களை வழங்கக்கூடிய நிறுவனங்களாக தரமுயர்த்தப்படும். இதற்காக அமைச்சரவை தீர்மானம் எட்டியிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.