சிறுவர்களை வேலைக்கமர்த்துதலை ஒழித்தல் மற்றும் 13 வருட கட்டாயக் கல்வி ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நடைமுறையாக பிள்ளைகளை வேலைக்கமர்த்தும் வயதெல்லையை 14 இலிருந்து 16 ஆக அதிகரிப்பதற்கு தொழிலாளர் தொழில்சங்கங்கள் தொடர்பாடல் அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் டப்ளியூ. டp. ஜே. செனவிரத்ரன பாராளுமன்றில் தெரிவித்தார்.
அனைத்து பிள்ளைகளும் 16 வயது வரை கல்வி பெறுவது கட்டாயமானதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளதற்கு ஏற்ப தொழிலாளர் தொடர்பான சட்டதிட்டங்களும் மாற்றப்படவூள்ளதாக அவர் தெரிவித்தார்.
1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க பெண்கள்இ இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை வேலைகளில் ஈடுபடுத்தல் தொடர்பான சட்டம் மற்றும் 1942 ஆம் அண்டின் 45 ஆம் இலக்க தொழிற்சாலை கட்டளைச்சட்டம்இ 1954 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க வியாபர நிலையம் மற்றும் அலுவலகங்கள் சட்டம் முதலானவை இதற்கேற்ப திருத்தப்படவூள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையில் நடைமுiறியில் உள்ள சட்டத்திற்கேற்ப 14 க்கு குறைவான வயதுடைய பிள்ளைகளை எந்த வொரு தொழிலலும் ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது எனவூம் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.